ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவனம் செலுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த தேர்தலை நடத்த உள்ளார்.
ஆளும் கட்சியினர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சுமத்தும் நபர்களுக்கு, தனக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை நிரூபிக்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு முன்கூட்டியே தேர்தலை நடத்த உள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காம் ஆண்டு, இந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பூர்த்தியாகிறது. இதன் பின்னர் தேர்தலை நடத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதிகாரம் உள்ளது. முன்கூட்டி தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்ற ஊகத்தை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெளியிட்டிருந்தார்.
















