கிளிநொச்சியில் வைத்த கைதுசெய்யப்பட்டு தற்போது பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுவிக்கக் கோரிய போராட்டம் நாளை திட்டமிட்டப்படி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் நாளை 10ஆம் திகதி வவுனியா நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்து வரும் வவுனியா பிரஜைகள் குழு தலைவர் ஜி தேவராஜா நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளானார்.
எனினும் இந்த தாக்குதலின் மத்தியிலும் தமது ஏற்பாட்டு போராட்டம் நாளை நடத்தப்படும் என்று ப்ரீஜெயக்குமாரி இயக்கம் அறிவித்துள்ளது.
















