வவுனியா அரசன்குளம் மக்கள் வாழ்வதற்காக போராட்டம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

vau-peoples5வவுனியா அரசன்குளம் மக்கள் வாழ்வதற்காக போராட்டம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வவுனியா, ஓமந்தை, அரசன்குளம் மக்கள் மீள்குடியேறிய போதும் தமது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையால் வாழ்வதற்காக போராடி வருகிறார்கள். ஆனால் அதிகாரிகள் இதனைக் கண்டு கொள்ளவில்ரைல என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்டகுட்பட்ட ஓமந்தை கிராம அலுவலர் பிரிவில் உள்ள கிராமமே அரசர்குளம். ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக இப் பகுதி மக்கள் 1997 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்திருந்தனர். இராணுவத்தினரின் முன்னரங்க காவல் நிலைகள் இப் பகுதியில் காணப்பட்டதால் 2009 ஆண்டு இறுதிப் பகுதியிலேயே இராணுவம் வெளியேறிய பின்னர் இவர்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

சுமார் 70 குடும்பங்கள் இங்கு குடியேறிய போதும் 20 குடும்பங்களுக்கே தற்காலிக சிபொட் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டன. இவை ஒருவருடத்திற்கான வீடுகள். ஆனால் ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் இம் மக்கள் அவ் சிப்பொட் வீடுகளுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். ஏனைய 50 குடும்பங்களும் கொட்டில்களையும், மண்வீடுகளையும் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். மழை காரணமாக இவ் வீடுகளுக்குள் வாழ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னர் அமைக்கப்பட்ட இராணுவ முன்னரங்க நிலைகள் இராணுவம் வெளியேறிய போதும் இங்கிருந்து அகற்றப்படவில்லை. ஓமந்தை சின்னக்குளம் வீதியில் இருந்து ஓமந்தைக்குளம் வரை மக்கள் வீட்டுக் காணிகளுக்கால் இக் காவல் நிலைகள் செல்கின்றன. இதனால் இவர்கள் தோட்டம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதுடன் நீரும் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இக் காவலரணை முழுமையாக அகற்றி தமது வீட்டுத் திட்டத்தை வழங்குமாறு இப் பகுதி மக்கள் கோரி நிற்கின்றனர்.

Tags: , ,

Leave a Reply