முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் அழகு ரகசியங்களை தெரிவித்துள்ளார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதா சென். அதன் பிறகு அவர் நடிகையானார். ரினீ, அலிஷா ஆகிய 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 38 வயதிலும் அவர் இளமையாகத் தெரிகிறார்.
டாக்டர் நிர்மலா ஷெட்டி எழுதிய பியூட்டி அட் யுவர் ஃபிங்கர் டிப்ஸ் என்ற புத்தகத்தை சுஷ்மிதா சென் புதன்கிழமை அன்று மும்பையில் நடந்த விழாவில் வெளியிட்டார்.
தோல் மற்றும் முடி அழகாக இருக்க ரசாயன பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கை முறையே சிறந்தது என்றார் சுஷ்மிதா.
தேவையான அளவு தூக்கம் மற்றும் நன்றாக தண்ணீர் குடித்தால் அழகாகத் தோன்றலாம் என்று சுஷ்மிதா தெரிவித்தார்.
வேப்பிலை, புதினா இலை மற்றும் வெள்ளரி ஆகியவற்றை அறைத்து முகத்தில் தடவினால் பருக்கள் வராது என்றார் சுஷ்.
புத்தக வெளியீட்டு விழாவை அடுத்து அவர் சோட்டுஷ்கோனே என்ற பெங்காலி மொழி படத்தின் சிறப்பு காட்சியை தனது தாய் சுப்ரா சென்னுடன் கண்டு களித்தார்.
















