இந்தியர் கைலாஷ், பாகிஸ்தான் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

nobelprice-winner5குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்காகப் பாடுபட்டதற்காக இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக போராடிய ஒரே காரணத்துக்காக தாலிபான் தீவிரவாதிகளால் துப்பாக்கி தாக்குதலில் உயிர் பிழைத்த பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்காகப் பாடுபடுபவர் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி. இவர் பச்பன் அந்தோலா என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்காக போராடும் அனைவருக்குமான பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு பெறுவது குறித்து கைலாஷ் கூறுகையில், தனக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது, குழந்தைகளுக்கான உரிமைகளுக்காக பாடுபவர்களுக்கு மகிழ்ச்சியையும் கவுரவத்தையும் தந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் பரிசு இது. மேலும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை உருவாக்க, குழந்தைகள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இது தங்களைப்போல சமூகப் பணியாற்றுபவர்களுக்கு கவுரவம். குழந்தைகளுக்காக போராடும் அனைவருக்குமான பரிசு இது, பணிபுரிந்து வரும் அனைத்து குழந்தைகளையும் மீ்ட்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார்.

பெண் கல்விக்கு குரல் கொடுத்த மலாலா

பாகிஸ்தானை சேர்ந்த மாணவி மலாலா (17), தாலிபான் தீவிரவாதிகளின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9ஆம் தேதி பள்ளிக்கூட பேருந்தில் மலாலா பயணம் செய்த போது தாலிபான் தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாலா, லண்டனில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இந்த சம்பவத்தின் மூலம் அவர் உலகமெங்கும் பிரபலம் ஆனார். இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை மலாலா பெற்றுள்ளார்.

Tags: , ,

Leave a Reply