அபிவிருத்தியின் பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை: ஐ.தே.க குற்றச்சாட்டு

unpஅபிவிருத்தியின் பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எவ்வளவு அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டாலும் அது மக்களினால் உணரப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சமுர்தித்திட்டம் தொடர்பில் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பணம் உள்ளவர்களின் பணம் அதிகரித்துள்ளது. வறியவர்களின் வறுமை மேலும் மேலும் அதிகரித்துள்ளது.

அபிவிருத்தியின் பலன்கள் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை.

அபிவிருத்தியின் பயன் மக்களினால் உணரக் கூடிய வகையில் இருக்க வேண்டியது அவசியமானது என ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply