த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்காவை அடுத்து ஆர்யாவின் புதிய கேர்ள் பிரண்ட் ஆகிறார் தமன்னா.

aarya-new-girlfriendத்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா, எமி ஜாக்சன், அமலா பால் ஆகியோர்களை அடுத்து ஆர்யாவின் புதிய கேர்ள் பிரண்டாக மாறுகிறார் நடிகை தமன்னா. பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றி படத்தை அடுத்து ஆர்யாவுடன் மீண்டும் இணையும் எம்.ராஜேஷின் புதிய படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாவது பாகம் என்பதை மறுத்துள்ள எம்.ராஜேஷ் இது புதிய கதை, என்றும், இந்த படத்திற்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த புதிய படத்தை ஆர்யா தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும், அவருடைய பரிந்துரையின் பேரில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆர்யாவுடன் நடிக்க மிகவும் ஆவலாக உள்ளதாகவும், ஆர்யாவின் நட்பை பெற இந்த படம் தனக்கு ஒரு வாய்ப்பு அளித்திருப்பதாகவும் தமன்னா தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் ‘‘ஆர்யா டீம் பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். அங்கு நடக்கும் அரட்டை கச்சேரியில் எப்போது பங்கேற்கப்போகிறேன் என்ற குஷியுடன் காத்திருக்கிறேன்‘ என தெரிவித்திருக்கிறார்.

மிகவும் குறுகிய காலத்தில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ள ஆர்யா மற்றும் எம்.ராஜேஷ், இந்த படத்தின் படப்பிடிப்பை தீபாவளி முடிந்தவுடன் தொடங்க உள்ளனர்.

Tags: , , ,

Leave a Reply