புங்குடுதீவு ‘சொக்கலிங்கம் அக்கடமி’யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்வுகள்..!

pungu9புங்குடுதீவு ‘சொக்கலிங்கம் அக்கடமி’யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்வுகள்..!

மேற்படி ‘சொக்கலிங்கம் அக்கடமி’ என்கிற இலவச கல்வி நிலையத்தின் சார்பில், “உலக சிறுவர் தினத்தினையும், நவராத்திரி விழாவினையும்” முன்னிட்டு கடந்த 04.10.2014 சனிக்கிழமை அன்று ‘புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தின் ஜே-26 கிராமப் பிரிவிலுள்ள “சொக்கலிங்கம் அக்கடமி”யால் ஆரம்பிக்கப்பட்ட “நந்தவனம் சிறுவர் கழகத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு மைதானத்தில் கலை நிகழ்வுகளும், விளையாட்டுப் போட்டியும், சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

“நந்தவனம் சிறுவர் கழகத்தின்” தலைவர் திரு. அருள்ராசா மெண்டன் பயஸ் மற்றும் செயலாளர் செல்வி தேவதாஸ் மேரிகொன்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், மேற்படி கலைநிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டன.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புங்குடுதீவு தேவாலய பங்குத்தந்தை அருட்திரு சின்னத்துரை லியோ ஆம்ஷ்ரோங் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் ஜெசாட் நிறுவன தீவுப் பகுதிக்கு பொறுப்பான திரு. நதீஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி போட்டிகளுக்கு மத்தியஸ்தர்களாக செல்வி.கிருஷ்ணமூர்த்தி ஜீவிதா, செல்வி சூரியகுமார் கஜலக்ஷி, செல்வி அன்ரா ரெக்ஷி ஆகியோர் கடமையாற்றியதுடன், அவர்களுடன் உதவியாளர்களாக திருமதி அமலரட்ணம் டெலா குணவதி, செல்வி நடராஜா பிருந்தா, திருமதி சத்தியசீலன் கோமேஸ்வரி, திரு. ஓங்காரநாதன் ஜெகதாஸ், திரு திலீப்குமார் ஆகியோரும் பணியாற்றியிருந்தனர். குறிப்பாக விளையாட்டுக்களுக்கு பொறுப்பாக செல்வி மேக்டலின் டயானா, திருமதி நடராஜா சத்தியதேவி, திருமதி சுலோசனா தனம் ஆகியோர் கடமையாற்றியதோடு, மேற்படி விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலி ஒளி அமைப்புக்கான உதவியை திரு. சுரேஷ் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய பிள்ளைகளுக்கும், நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டதுடன், குடும்பத் தலைவிகளுக்கான ஓட்டப் போட்டிகள், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான ஓட்டப் போட்டிகளும் இடம்பெற்று அவர்களுக்கான பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள், நாட்டிய நடன நிகழ்வுகளை “சொக்கலிங்கம் அக்கடமி”யில் ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்ற செல்வி காஞ்சனா றோஸஸ் அவர்களும் திருமதி ரூபிகா திலீப்குமார் அவர்களும் நெறியாள்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வந்து கலந்து கொண்டிருந்த புங்குடுதீவு தேவாலய பங்குத்தந்தை அருட்திரு சின்னத்துரை லியோ ஆம்ஷ்ரோங் அவர்கள் உரையாற்றுகையில்..,

“பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், புலம்பெயர்ந்து வாழும் சொக்கலிங்கம் அவர்களின் குடும்ப உறவுகள், இந்த இலவசக் கல்விச் சேவையினை பிள்ளைகளுக்காக ஆற்றி வருகின்றனர். இந் நிலையில், இங்கு கல்வி கற்கின்ற மாணவ, மாணவியரும் தமது கல்வியினை திறம்படப் பயின்று வெற்றி பெறுவதே அவர்கள் செய்த சேவைக்கு மதிப்பளிப்பதாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து, “சொக்கலிங்கம் அக்கடமி”யின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்ற திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் உரையாற்றுகையில்..,

இந்நிகழ்விற்கு வருகை தந்து கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் “விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான மற்றும் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கான அன்றையதின அனைத்து செலவுகளையும், சொக்கலிங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியான பரமகுமார் விஜயகுமாரியின் மகனான செல்வன் கிசாந்த் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஏற்றுக் கொண்டதையிட்டு அக்குடும்பத்தினருக்கும்; மிகுந்த நன்றியினைத்” தெரிவித்துக் கொண்டார்.

மேலும், “இதுபோன்ற நல்லதொரு நிகழ்ச்சியினையும், விளையாட்டுப் போட்டியினையும் நடாத்தியமைக்காக புங்குடுதீவு சொக்கலிங்கம் இலவச கல்வி நிலையத்திற்கும், சொக்கலிங்கம் குடும்ப உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதாகவும், எதிர்காலத்திலும் சிறுவர்களுக்கான கல்வி, விளையாட்டுச் சேவையை தொடர்ந்தும், மனம்கோளாது சொக்கலிங்கம் அவர்களின் குடும்ப வாரிசுகள் செய்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என உறுதிபட நம்புகிறேன்” எனவும் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி “சொக்கலிங்கம் அக்கடமி”யில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாலைநேர இலவசக் கல்வி கற்பிக்கப்படுவதுடன், வெள்ளிக்கிழமைகளில் நாட்டிய நடன பயிற்சி வகுப்புகளும், ஒவ்வொறு ஞாயிறு தினங்களிலும் மதிய உணவுடன் அறநெறிப் பாடசாலையும் நடாத்தப்பட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இவ்வண்ணம்….
திருமதி. தனபாலன் சுலோசனாம்பிகை
புங்குடுதீவு.

தகவல்… திரு.சொ.கருணைலிங்கம் – லண்டன்.

Tags: , ,

Leave a Reply