பாரத தேசத்தை நம்புங்கள்! சுவாமியின் கருத்து பாஜக வின் கருத்தல்ல! தமிழிசை சௌந்தரராஜன்

tamilisaiபாரத தேசத்தின் மீது நம்­பிக்­கையை வையுங்கள். இலங்கையில் தமி­ழர்கள் தலை­நி­மிர்ந்து நடக்­க­வேண்டும். அத்­துடன் அவர்­க­ளுக்­கான உரி­மையை பெற்­றுத்­தரும் வரை பார­திய ஜனதா கட்சி முழு­மை­யாக பாடு­படும். சுப்பி­ர­ம­ணியன் சுவா­மியின் கருத்து எங்கள் கருத்­தல்ல. இவ்வாறு தமி­ழக பாஜக தலைவர் திரு­மதி தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன் தெரிவித்துள்ளார். இவ்­வாறு பார­திய ஜனதா கட்­சியின் தமி­ழக புதிய தலை­வ­ராகப் பொறுப்­பேற்­றி­ருக்கும் திரு­மதி தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வாரவெளியீடு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

அவ­ர் வழங்கிய முழு­மை­யான செவ்வி வரு­மாறு..

கேள்வி: – இலங்கை தமி­ழர்­களின் நலன்­க­ளுக்­காக பார­திய ஜனதா கட்சி எம்­மா­தி­ரி­யான நிலைப்பாட்­டினை மேற்­கொண்­டி­ருக்­கி­றது?

பதில் – நாங்கள் ஏற்­க­னவே கூறி­யதைப் போல் அங்­குள்ள தமி­ழர்கள் ஆட்சி அதி­காரம் முழு­மை­யாக கிடைக்­க­வேண்டும் என்­பதில் நாங்கள் முழு உறு­திப்­பாட்­டுடன் இருக்­கிறோம். மரி­யா­தைக்­கு­ரிய தமிழ் கூட்­ட­மைப்பின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சம்­பந்தன் அவர்கள் பாரத பிர­தமர் மோடி அவர்­களை சந்­தித்­து­விட்டு, எங்­களை காண வந்­த­போது எங்­க­ளிடம் பகிர்ந்­து­கொண்­டது என்­ன­வெனில், பிர­தமர் மோடி, முதலில் ஜனா­தி­பதி ராஜபக்சவை சந்­தித்­த­போது எங்கள் தமி­ழர்­க­ளுக்­கான வாழ்­வு­ரி­மையை நீங்கள் முழு­வ­து­மாக ஆட்சி அதி­கா­ரத்­துடன் தர­வேண்டும் என நான் நேர­டி­யாக சொன்னேன் என்­பதை எம்­மிடம் சொன்னார், இந்­நி­லையில் நாம் எதை எதிர்ப்­பார்த்­துக் ­கொண்­டி­ருக்­கி­றமோ அது நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

காங்­கி­ரஸும் பி.ஜே.பியும் ஒன்று தான் இரண்டு கட்­சி­க­ளுமே ஒன்­றுமே செய்­ய­வில்லை என்ற வாய்­ச­வ­டா­லான குற்­றச்­சாட்டை நான் முற்­றி­லு­மாக மறுக்­கிறேன்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பந்தன் எங்­க­ளி­டையே சொன்­னது, பிர­தமர் மோடி­யுடன் ஒன்­றரை மணி நேரம் ஒதுக்கி பொறு­மை­யாக இப்­பி­ரச்­சினை குறித்து நாங்கள் எடுத்­து­ரைத்­ததை கேட்­டுக்­கொண்டார் என்றார்.

ஆட்­சி­யாள்ர்கள் இவ்­வி­ட­யத்தை முழு­மை­யாக கிர­கித்­துக்­ கொள்­வது என்­பதே மிக்ப்­பெ­ரிய விடயம். இன்­றைய திக­தியில் காங்­கி­ரஸ்­கா­ரர்கள் மீன­வர்­களின் பிரச்­சினை குறித்து பிர­தமர் மோடி இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிடம் நேர­டி­யாக பேச­வில்­லையே என்று குற்றம் சாட்­டு­கி­றார்கள்.

பத்து ஆண்­டுகள் ஆட்­சி கொண்­டி­ருக்கும் போது அங்கே இனப்­ப­டு­கொலை நடை­பெற்­றுக் ­கொண்­டி­ருக்கும் உச்­ச­கட்ட வேளையில் மாநி­லத்தை ஆண்ட தி.மு.கவும் ஒன்றும் செய்­ய­வில்லை. மத்­தியில் ஆண்டு­ கொண்­டி­ருந்த காங்­கிரஸ் அரசும் ஒன்றும் செய்­ய­வில்லை.

இந்­நி­லையில் பி.ஜே.பி.யைப் பற்றி குற்றம் சாட்­டு­வது பொருத்­த­மா­ன­தாக இல்லை. இங்கே ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது போல் அங்கே ஆட்சி மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. அங்­குள்ள அதே ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் தான் நாம் இன்னும் உரி­மை­களை கேட்டு கோரிக்கை விடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

மோடி ஆட்­சியில் அமர்ந்த பின் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் திரு­மதி சுஷ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு­வினர் அங்கு சென்று திரும்­பினர். அதனைத் தொடர்ந்து நாங்கள் அவர்­களை சந்­தித்து பேசி­ய­போது, எங்­க­ளிடம், நாம் அங்கே வாழும் தமி­ழர்­களின் மறு­வாழ்­வுக்­கான பணி­களை விரை­வு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறோம்.

பதின்­மூன்­றா­வது சட்­டத்­தி­ருத்­தத்தை ஆட்சி அதி­கா­ரத்­துடன் கூடிய பதி­ன்மூன்­றா­வது சட்­டத்­தி­ருத்­தத்தை உறு­தி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று கேட்­டுக்­கொண்­டி­ருக்­கிறோம்.

எம்மைப் பொறுத்­த­வரை இப்­பி­ரச்­சி­னைக்கு வீதியில் இறங்கி போரா­டலாம். அனை­வரின் கவ­னத்­தையும் கவ­ரலாம். ஆனால் இப்­பி­ரச்­சி­னைக்­கு­ரிய உண்­மை­யான தீர்வை பார­திய ஜனதா கட்­சி­யினால் தான் கிடைக்கும் என்­பதை உறு­தி­யாக நம்­பு­கிறேன்.

அதிலும் இவ்­வி­ட­யத்தில் தமி­ழக பார­திய ஜனதா கட்சி முழு மூச்­சுடன் செயல்­பட்டு வரு­கி­றது. இங்கு நடை­பெறும் அனைத்து விட­யங்­க­ளையும் நாங்கள் தலைமை மத்­திய அர­சிற்கு தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கிறோம்.

ஆக கால அவ­காசம் என்ற ஒன்று வேண்டும். நாங்கள் ஆட்­சிக்கு வந்து நூறு நாட்கள் தான் ஆகி­யி­ருக்­கின்­றன. பத்து ஆண்­டு­களுள் முடி­யா­ததை, அறு­பத்­தி­யேழு ஆண்­டு­களில் முடி­யா­ததை நூறு நாட்­க­ளுக்குள் நீ ஏன் செய்­ய­வில்லை என்று கேட்டால், முதலில் நோக்­கத்தைப் பார்க்­க ­வேண்டும்.

அங்­குள்ள தமி­ழர்­க­ளுக்கு ஆட்சி அதி­கா­ரத்­துடன் கூடிய உரி­மை­களை பெற்­றுத்­த­ர­வேண்டும் என்ற நோக்கம் இருக்­கி­றது. இந்த நோக்­கத்தை நோக்கி நாங்கள் பய­ணப்­பட தொடங்­கி­விட்டோம். ஆனால், ஒரு வெளி­யு­ற­வுத்­துறை கொள்கை, ஒரு ஆட்சி ஒரு கட்சி, இன்­னொரு ஆட்சி அங்கே நடை­பெற்­றுக்­ கொண்­டி­ருக்­கி­றது.

இதை­யெல்லாம் வைத்து பார்க்கும் போது சற்று கால அவ­காசம் தேவைப்­ப­டு­கி­றது. கால அவ­கா­சத்­திற்குள் தான் நாங்கள் இருந்து கொண்­டி­ருக்­கிறோம். அங்கு தமி­ழர்கள் தலை­நி­மிர்ந்து நடக்­க­வேண்டும். அத்­துடன் அவர்­க­ளுக்­கான உண்­மையை உரி­மையை பெற்­றுத்­தரும் வரை பார­திய ஜனதா கட்சி முழு­மை­யாக பாடு­படும்.

கேள்வி – அண்­மையில் சுப்­பிர­ம­ணியன் சுவாமி சொன்ன சில கருத்­துகள் முரண்­பா­டாக இருக்­கின்­றதே…?

பதில் – இது குறித்து நான் மிகத் தெளி­வாக சொல்­லி­விட்டேன். இந்­திய ஊட­கங்­க­ளுக்கும், எங்­களின் கட்­சித்­த­லை­மைக்கும் நாங்கள் தெளி­வாக கூறி­விட்டோம். சுப்பி­ர­ம­ணியன் சுவா­மியின் கருத்து எங்கள் கருத்­தல்ல. தமி­ழக பார­திய ஜனதா கட்­சியின் தலை­வரோ அல்­லது தமி­ழக பார­திய ஜனதா கட்­சியின் நிர்­வாக குழுவில் இருப்­ப­வர்­களோ யாரும் இது போன்று பேசு­வ­தில்லை.

கேள்வி – இப்­பி­ரச்­சினை குறித்து இந்­திய பிர­தமர் மோடி தலை­மை­யி­லான அர­சாங்கம், ஜனா­தி­பதி ராஜபக்ச அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தும் திட்டம் ஏதேனும் இருக்­கி­றதா?

பதில் – இதற்­கான முயற்­சிகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. பல கூட்­டங்கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. பல சந்­திப்­புகள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. ஒரு பிர­தமர் ஒரு அதி­பரை சந்­திப்­பது என்­பது இறு­தி­யான நிலை­யாக இருக்­க­வேண்டும். அதற்கு முன் பல மட்­டங்­களில் பேச்­சு­வார்த்தை நடை­பெ­ற­வேண்டும்.

பேச்­சு­வாத்தை எந்த திசையில், எத்­த­கைய தீர்வை முன்­வைத்து நடை­பெ­ற­வேண்டும் என்­பதை முதலில் இறுதி செய்­ய­வேண்டும். அந்த தீர்வை நோக்கி நாங்கள் முன்­னே­றிக்­கொண்­டி­ருக்­கிறோம் என்­பதை உறு­தி­யாக சொல்­லிக்­கொள்­கிறோம்.

ஏற்­க­னவே மோடி, ராஜபக் ஷ சந்­திப்பின் போது மோடி நேர­டி­யாக எடுத்­துக்­கூ­றிய பல விட­யங்­க­ளுக்கு ராஜபக்ச தரப்­பி­லி­ருந்து மறுப்பு வர­வில்லை என்­பதை நினை­வூட்ட விரும்­பு­கிறேன்.

கேள்வி – சீனாவின் ஆதிக்கம் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் இந்­தியா முன்­வைத்­தி­ருக்கும் பதின்­மூன்­றா­வது சட்டத் திருத்­தத்­திற்கு இலங்கை அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்பு எப்­ப­டி­யி­ருக்கும்? அத்­துடன் இந்­தி­யாவின் வெளி­யு­றவு கொள்­கையில் மாற்றம் வருமா?

பதில் – ஒரு ஆட்­சி­யா­ளரின் வெளி­யு­றவு கொள்கை எப்­ப­டி­யி­ருக்கும் என்று ஒரு கட்சித் தலை­வரால் சொல்ல இய­லாது. ஒரு சிறிய சம்­ப­வத்தை நினை­வு­ப­டுத்­து­கிறேன். தூத்­துக்­கு­டியை சார்ந்த தாதி­யர்கள் அரபு நாடு­களில் ஒன்­றாக ஈராக்கில் கஷ்­டப்­பட்டுக் கொண்­டி­ரு­ந­தார்கள் உட­ன­டி­யாக தலை­யிட்டு அவர்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களை செய்து கொடுத்தோம்.

பார­திய ஜனதாக் கட்­சியின் வெளி­யு­ற­வுக்­கொள்கை, இந்­திய மக்கள் அவர்கள் தமி­ழர்­க­ளாக இருந்­தாலும் சரி,அவர்­களை காப்­பாற்­றக்­கூ­டிய கொள்­கை­யா­கத்­தா­னி­ருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறு­தி­யாக எம்மால் சொல்­ல­மு­டி­யயும். அங்கே மரி­யா­தைக்­கு­ரிய வகை­யி­லான தீர்வைப் பெற்று தரு­வ­தா­கத்தான் எங்­களின் வெளி­யு­றவுக் கொள்கை அமைந்­தி­ருக்கும்.

இதற்கு முந்­தைய ஆட்­சியில் முழு­வீச்­சி­லான எதிர்ப்பு நிலையில் இருக்கும் போது, ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு, சில மாற்­றங்­களை கொண்டு வரும் போது அதற்­கு­ரிய கால அவ­காசம் தேவைப்­ப­டு­கி­றது.

கேள்வி – பிர­தமர் மோடி அவர்கள் வட மாகாண முத­ல­மைச்சர் அவர்­களை சந்­திக்­க­வேண்டும் என்று விருப்பம் தெரி­வித்­தி­ருக்­கிறார். இந்­நி­லையில் தமி­ழக பார­திய ஜனதா கட்­சியின் தலை­வ­ரான தங்­க­ளுக்கும் இது போன்­ற­தொரு எண்­ண­மி­ருக்­கி­றதா?

பதில் – நிச்­ச­ய­மாக இருக்­கி­றது. சம்­பந்தன் அவர்கள் இங்கு வருகை தந்­த­போது அவரும் இந்த எண்­ணத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். அத்­துடன் அங்கே நடை­பெறும் மற்றும் நடை­பெற்று வரும் அவ­லங்­க­ளையும் எடுத்­து­ரைத்­தி­ருக்­கிறார். அத்­துடன் அங்கு பெண்கள் அதி­க­ளவில் இருக்­கி­றார்கள். வாருங்கள் அவர்­க­ளிடம் பேசி அவர்­களின் நிலையைப் பற்றி தெரிந்­து­கொண்டு செல்­லுங்கள் என்­றி­ருக்­கிறார்.

எம்மைப் பொறுத்­த­வரை தற்­போது தான் தமி­ழக பார­திய ஜனதா கட்­சியின் தலை­வ­ராக பொறுப்­பேற்­றி­ருக்­கிறேன். பொறுப்­பேற்­ற­வுடன் தமி­ழ­கத்தில் நடை­பெற்ற உள்­ளாட்சி இடைத்­தேர்­தலை ஆளுங்­கட்­சிக்கு எதி­ராக சந்­தித்து, தீவி­ர­மாக களப்­ப­ணி­யாற்­றினோம். இதனைத் தொடர்ந்து கட்­சியின் தேர்தல், உட்­கட்சித் தேர்தல் என பல பணிகள் இருக்­கின்­றன. இருந்­தாலும் இலங்­கைக்கு வர­வேண்டும் என்ற சம்­பந்தன் அவர்­களின் அழைப்பை தமி­ழக பார­திய கட்சி பரி­சீ­லிக்கும்.

கேள்வி – தமிழ் மக்­க­ளுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் – தமிழ் மக்களுக்கு இதற்கு முன் நடந்த சம்பவங்களுக்கு வருத்தத்தையும், இனிமேல் நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கு ஒரு நம்பிக்கையையும் தமிழ் மக்கள் பெறவேண்டும் என்று மிகவும் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

நான் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மருத்துவ மேற்படிப்பினை மேற்கொண்ட போது அங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் என் மீது காட்டிய அன்பும், அக்கறையும், அரவணைப்பும் மறக்க இயலாது.

எந்த சமுதாயத்திற்கும் இல்லாத ஒரு சோதனை இந்த தமிழ் சமுதாயத்திற்கு வந்திருக்கிறது. இருப்பினும் நாம் நம்மை இந்த அதிகப்படியான சோதனைகளிலிருந்து விடுவித்து மேம்படுத்திக் கொள்வதில் தான் நம்முடைய எதிர்காலம் இருக்கிறது.

அத்துடன் நாம் ஆட்சி அதிகாரத்துடன் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். எந்த இலங்கையில் நாம் தனித்து விடப்பட்டோமோ அதே இலங்கையில் மீண்டும் அதே உரிமையுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.

உங்களது சகோதர தேசமான பாரத தேசத்தின் மீது நீங்கள் முழுமையான நம்பிக்கையை வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Tags: , ,

Leave a Reply