ஸ்ருதிஹாசனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்த ஜூனியர் என்.டி.ஆர். டோலிவுட்டில் பரபரப்பு.

junior-ntr-shruti-hassanநடிகை ஸ்ருதிஹாசனுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மகேஷ்பாபு, தமன்னா நடித்த ‘அகடு’ படத்தின் வெற்றிக்கு ஸ்ருதிஹாசனின் ஐட்டம் டான்ஸ் ஒரு காரணம் என விமர்சகர்களால் பரவலாக பேசப்பட்டது. இதனால் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது நடித்து வரும் படத்தில் ஸ்ருதிஹாசனை ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடும்படி ரகசியமாக கேட்டுக்கொண்டாராம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பிசியான ஷெட்யூலில் இருந்தாலும், ஜூனியர் என்.டி.ஆருக்காக அவருடைய படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு படத்தில் நடிப்பதால் கிடைக்கும் சம்பளத்தில் பாதி ஒரே ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடுவதால் கிடைத்துக்கொண்டிருப்பதால் இளம் நாயகிகளின் கவனம் தற்போது ஐட்டம் டான்ஸ்களில் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசனை தொடர்ந்து தமன்னா, இலியானாவும் ஒரு பாடலுக்கு ஆட தயார் என அறிவித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply