உதயமாகிறது சீனாவின் சொர்க்கம். 2230 அடியில் பிரமாண்ட கட்டிடம்.

super-city-in-chinaஉலகின் மிக உயரமான கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு சீன நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. இந்த கட்டிடத்தின் உயரம் சுமார் 2230 அடிகள் ஆகும். இந்த கட்டிடத்தில் வாழ்வது மேகத்தின் நடுவே வாழ்வதற்கு சமமான ஒரு அனுபவத்தை பெறலாம் என இந்த கட்டிடத்தை கட்ட முடிவு செய்திருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Cloud Citizen project என்று அழைக்கப்படும் இந்த திட்டத்திற்கு வடிவமைப்பு கொடுத்த நிறுவனங்கள் மூன்று ஆகும். அவை Urban Future Organisation, CR-design மற்றும் Chalmers Technical University ஆகியவை. இந்த கட்டிடத்தில் சோலார் மூலம் மின்சாரம், மழைநீர் சேகரிப்பு, ஆகிய வசதிகளும் உண்டு. இந்த கட்டிடத்தின் உள்ளே ஐ.டிநிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கலாச்சார பள்ளிகள் ஆகியவை இடம்பெற உள்ளன.

சூப்பர் சிட்டி’ என்று அழைக்கப்படவுள்ள இந்த கட்டிடத்தை 2230 அடி உயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 1.7 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட இருக்கும் இந்த கட்டிடம் உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற உள்ளது. Burj Khalifa என்ற இடத்தில் உள்ள கட்டிடம் 2717 அடி உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூப்பர் சிட்டி கட்டிடம் சீனாவில் உள்ள Shenzhen Bay என்ற இடத்தில் அமைய இருக்கின்றது. இந்த கட்டிடத்தின் டிசைனை 12 வாரத்தில் அதன் எஞ்சினியர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்பது குற்ப்பிடத்தக்கது. மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த கட்டிடத்தின் பணிகளுக்காக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எஞ்சினியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர். இந்த கட்டிடத்தை சீனாவின் சொர்க்கம் என்று அழைப்பதில் எவ்வித தவறும் இல்லை என்று கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply