பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க முயன்றவரின் ஆணுறுப்பை கசாப்புக் கடைக்கு இழுத்துச் சென்று வெட்டிய சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காந்திநகர் கிராமத்தில் இடம்பெற்று இருக்கின்றது.
40 வயதான ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் dailystar ஊடகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது.
ஆணுறுப்பு வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த நபரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண்ணுக்கு உளவள ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தை கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆத்திரத்தில் ஒரு மணிநேரமாக அடித்து உதைத்து பின் அருகிலுள்ள கசாப்புக் கடைக்கு குறித்த நபரை அழைத்துச் சென்று அவரின் ஆணுறுப்பை வெட்டி வீதியில் எறிந்து தங்களது கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த Aamir Dhawan கருத்து தெரிவிக்கையில்,
குறித்த நபருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. ஏனெனில் இது ஒரு கொடுமையான பாலியல் குற்றம். இந்த நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தலை விரித்தாடி வருகின்றன.
அதற்கு இப்படி உடனடியாக தண்டனை வழங்கினால் தான் இச்செயல்களை செய்ய எத்தனிக்கும் ஏனையோருக்கும் ஒரு பாடமாக இருக்கும். இப்படியான குற்றங்களை செய்பவர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு வலுவான செய்தியினை எடுத்துச் செல்கின்றது. என்றார்.
உள்ளூர் பொலிஸ் அதிகாரி இந்தச் சம்பவம் தொடர்பில் கூறுகையில்,
பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முயற்சிக்கக் கூடாது. இப்படியான குற்றங்கள் வருந்தத் தக்கது. சட்டம் ஒழுங்கை பேணி நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
















