வட பகுதியில் சிங்களமக்களுக்கு காணிகள் இருக்கின்றன – ஜனாதிபதி

Mahinda10வட மாகாணத்தில் இருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் காணிகள் இருந்ததாகவும், அவர்களை விரைவில் குடியேற்றப் போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இரணைமடு குடிநீர் திட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் செய்கின்றனர். ஆனால் அந்த விடயத்தில் மத்திய மாகாண அரசாங்கங்கள் இணைந்து செயலாற்ற வேண்டும்.

மேலும் நாம் மகாவலி கங்கையை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்தக் கட்டமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களையும், சிங்கள மக்களையும் குடியேற்ற வேண்டும.

அதற்கான காலம் வந்து விட்டதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியிருந்தார்.

Tags: , ,

Leave a Reply