சம்பிரதாயத்தை உடைத்தெறிந்து தந்தையின் சவப்பெட்டியை சுமந்த மகள்!

punjap-deathபஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினரில் மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியும் அடங்குவார். அவரது உடல் தகனம், குர்தாஸ்பூரில் நடைபெற்றது. அப்போது, ஆசிரியையான பதே சிங்கின் மகள் மது, அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தகன மேடைவரை தோளில் சுமந்து சென்றார். பொதுவாக, இந்து மதத்தில், ஆண்கள் மட்டுமே இறந்தவர்களின் உடலை சுமக்க தோள் கொடுப்பது வழக்கம். அந்த சம்பிரதாயத்தை உடைத்து, மது, தன் தந்தையின் உடலை சுமந்து சென்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம், சம்பவத்தன்று தாங்கள் உயிர் தப்பியது பற்றி விவரித்தார். குண்டு வெடிப்பு சத்தம் கேட்டவுடன், தன் தந்தை சீருடை அணிந்து கொண்டு சண்டைக்கு புறப்பட்டதாக அவர் கூறினார். தன் குடும்பத்தினர், இரண்டு மணி நேரம், படுக்கைக்கு அடியிலேயே பதுங்கி இருந்ததாகவும், தீவிரவாதிகளின் கண்ணில் படுவதை தவிர்க்க, இருட்டியவுடன் விளக்குகளை அணைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.

Tags: ,