ஊத்துக்கோட்டை அருகே திருமணம் நிச்சயமானதும் பெண்ணிடம் உல்லாசமாக இருந்து, பின்னர் பிடிக்கவில்லை என்று ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் சிறையில் அடைத்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த முக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (22). பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
இவருக்கும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கால்வாரி கண்டிகை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (32) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருவள்ளூரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
கடந்த ஜூன் மாதம் திருமணம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.இதையடுத்து இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் உல்லாசமாக இருந்தனர்.
திருமணத்துக்கு முதல் நாள் சுரேஷ் பெண் பிடிக்கவில்லை என்று கூறினார். இதனால் திருமணம் நின்றது. இது பற்றி ஊத்துக்கோட்டை மகளிர் போலீசில் செல்வி புகார் செய்தார்.
அதன் பேரில் எஸ்.ஐ. சத்யபாமா வழக்குப்பதிவு செய்து, வாலிபர் சுரேஷை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் சிறையில் அடைத்தார்.
















