சந்தானத்திடம் ரஜினி கேட்ட குவார்ட்டர். லிங்கா படப்பிடிப்பில் பரபரப்பு

rajini-with-santhanam-600சூப்பர் ஸ்டார் ரஜினியோடு காமெடி நடிகர் சந்தானம் ஏற்கனவே ‘எந்திரன்’ திரைபடத்தில் நடித்திருந்தாலும், அவர்கள் இருவருக்கும் எவ்வித காமெடி காட்சிகளும் கிடையாது. சந்தானம், கருணாசுடன் தான் காமெடி செய்துகொண்டிருப்பார். இந்நிலையில் லிங்கா படத்தில் சந்தானம், இளையதலைமுறை நடிகர்களுடன் கலாய்த்து நடிப்பது போன்றே ரஜினியுடனும் நடித்துள்ளதாக லிங்கா படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம் பெறும் வசனம் போன்று, ‘ரஜினி இந்த படத்தில் சந்தானத்திடம் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” என்று கூறும் வசனம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. லிங்கா படத்தில் ரஜினி மிக இளமையாக சந்தானத்திற்கு இணையான வயதுடையவராக நடித்து வருவதால் சந்தானமும் ரஜினியை கலாய்க்கும் காட்சிகள் இருக்கின்றது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ராதாரவி, சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும் லிங்கா திரைப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடல் ஹாங்காங் நகரில் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிக்கும் படத்தில் இடம்பெறும் அறிமுகப்பாடல் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

Tags: , ,

Leave a Reply