அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

australian_flagஇந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு கடந்த ஜூன் மாதம் சென்ற 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கன்பரா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள வழக்கு விசாரணைகளில் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஆணையாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில், கடந்த ஜூன் மாதம் 50 சிறுவர்கள் உள்ளிட்ட 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் இடைமறிக்கப்பட்டு, நடுக்கடலில் ஒரு மாதகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர், இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட சர்ச்சைகளால் 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் நவ்றூ தீவுகளிலுள்ள முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.

Tags: , ,

Leave a Reply