அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் கட்சிமாறுவதற்குத் தயாராக இருப்பதாக ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வர தயாராக இருக்கும் அமைச்சர்கள் தொடர்பில் இப்போதைக்கு தகவல்களை வெளியிட முடியாது. அப்படிச் செய்தால் அவர்களை அரசாங்கம் தடுத்துவிடும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் உடனடியாக ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து விடுவார்கள். இது தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
அமைச்சர்கள் பலரும் கட்சி மாறத் தயாராக இருப்பது தெரிய வந்திருப்பதால் தான் ஆளுங்கட்சி காஸ், மின்சாரம், கோதுமை போன்றவற்றின் விலைகளைக் குறைத்துள்ளது என்றும் ஜோசப் மைக்கல் பெரேரா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
















