பாகிஸ்தானிய அரசாங்கமும் மக்களும் இலங்கையுடனான உறவின் பெறுமதியை அறிந்திருப்பதாக அந்த நாட்டின் தேசியசபை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தேசிய சபையின் சபாநாயகர் அயாஸ் ஷாடிக், நேற்று இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஜெயலத் வீரக்கொடியை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான், இலங்கையுடன் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஆழமான நட்பு என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகிறது.
இது எதிர்காலத்தில் மேன்மைபெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
















