தீபாவளி இல்லாமல் 56 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்கள்

no_diwali_001தமிழகத்தில் சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சியில் உள்ள மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவளியே கொண்டாடுவதில்லை.

தொடக்கத்தில் இந்த கிராமத்தினர் விவசாயத்திற்காக வாங்கிய கடனின் வட்டியால் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாகக் கடன் பட்டு துன்பத்திற்கு ஆளாகி வந்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு முடிவு கட்ட, கடந்த 1958-ம் ஆண்டு நடந்த ஊர்க்கூட்டத்தில் கிராம தெய்வமான காடுகாவலர்சாமி மீது ஆணையாக, இனி தீபாவளி கொண்டாடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

விவசாயிகளை வாட்டி வதைக்கும் தீபாவளியை துறப்பது என்ற கொள்கை முடிவை கடந்த 56 ஆண்டுகளாக இப்போதும் கடைப்பிடித்து வருகின்றனர்.

மேலும், இக்கிராமத்தில் பெரியவர்கள் வகுத்த கொள்கைக்காக சிறுவர்களும் பட்டாசு வெடிக்கும் ஆசைகளை துறந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

Tags: , ,

Leave a Reply