ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உள்பட பல நாடுகள் தாக்குதலை தொடுத்து வந்திருந்தபோதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஈராக் அரசு திணறி வருகிறது. நேற்று தீவிரவாதிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத ஈராக், ஒரு முக்கிய நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு தாரை வார்த்தது.
ஈராக் நகரின் முக்கிய நகர் ஹீத் என்பது ஆகும். இந்த நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். நேற்று அதிரடி தாக்குதல்களை நடத்தினர். ஈராக் ராணுவ வீரர்கள் இந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். கடைசியாக வேறு வழியின்றி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஹீத் நகரை தாரை வார்த்துவிட்டு நகரில் இருந்து ராணுவம் வெளியேறியது.
மேலும் இந்த நகரில் உள்ள யாஷிடி என்ற இனத்தை சேர்ந்த பல பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று சிறை பிடித்தனர். இவர்களில் பலர் திருமணமாகாத கன்னிப்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறை பிடிக்கப்பட்ட பெண்களை அடிமையாக்க விற்பனை செய்யவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க போர் விமானங்களை நிறுத்த துபாய் அனுமதி கொடுத்துள்ளதால் துபாய் நாட்டிலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முடிவெடுத்துள்ளனர்.
















