அனுஷ்கா பாணியில் ஆக்ஷனுக்கு மாறும் நயன்தாரா

nayantaraஇதுவரை காதல் மற்றும் சாஃப்ட்டான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை நயன்தாராவுக்கு ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடித்து போரடித்துவிட்டதாகவும், இனிமேல் வித்தியாசமான கேரக்டர்களில் மட்டுமே நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக விஜயசாந்தி, அனுஷ்கா போல ஆக்ஷன் படங்களில் நடிக்க நயன்தாரா விருப்பப்படுகிறார்.

அனுஷ்கா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ருத்ரம்மாதேவி, பாஹுபாலி போன்ற திரைப்படங்கள் போல சரித்திர கேரக்டர்களிலும், விஜயசாந்தி போல ஆக்ஷன் கேரக்டக்ரளிலும் மட்டும் இனி நடிக்கவுள்ளதாக தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நான் மெச்சூரிட்டியில் இருப்பதாகவும், அதனால் இனிமேலும் என்னால் மரத்தை சுற்றி டூயட் பாடும் சாதாரண ஹீரோயினியாக தொடர முடியாது’ என்று தனது நட்பு வட்டாரங்களில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சூர்யாவுடன் மாஸ், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ மற்றும் உதயநிதியுடன் நண்பேண்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நயன்தாராவை அடுத்து அவரது ரசிகர்கள் ஆக்ஷன் ஹீரோயினியாக பார்க்கலாம்.

Tags: , ,

Leave a Reply