பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை

protest3சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைப் போராட்டம் தற்போது நாட்டில் சூடுபிடித்துள்ள ஒரு விவகாரமாக மாறி வருகின்றது.

மேலும் இதன் காரணமாக அரசாங்கத்துக்கும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக அண்மையில் அவர்களின் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் அரசாங்க குண்டர்களின் தாக்குதலுக்கும் இலக்காகியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களின் போது இந்த விவகாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதனால், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மூலம் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் மாணவர் தரப்பு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியவற்றுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் சங்கம், மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுவது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இணக்கப்பாட்டை பெற்றுள்ளது.

இதனையடுத்து மிக விரைவில் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் பின்னர் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளைக் காண்பதற்கு பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கான மத்தியஸ்தத்தில் ஆசிரியர் சங்கம் தொடர்ந்து ஈடுபடுவது என்று தீர்மானித்துள்ளதாக அதன் பேச்சாளர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply