இந்தியாவில் பேச்சு நடத்தவுள்ளார் கோத்தபாய

Gotabaya5இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வார முற்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜிட் டோவாலுடன் உயர்மட்ட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.

எனினும் இந்த சந்திப்புக்கான நோக்கம் எதுவும் தெரியவரவில்லை.

இந்த விஜயத்தை உறுதி செய்துள்ள புதுடில்லி தரப்பு விடயத்தானம் தொடர்பில் தகவல் தர மறுத்துவிட்டது.

எனினும் இது வழமையான சந்திப்பின் ஒரு கட்டமே என்று இலங்கையின் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply