மகாநாயக்கர் தெரிவிலும் அரசியல் குடுமிப்பிடி சண்டை

gnanasara-theroஇலங்கையின் நான்கு பௌத்த நிகாயாக்களில் ஒன்றான சீயம் நிகாயவின் மகாநாயக்கரைத் தெரிவு செய்யும் விடயத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
சீயம் நிகாயவின் மகாநாயக்கராக இருந்த பெல்லன ஞானவிமல தேரர் கடந்த வாரம் இயற்கை எய்தியிருந்தார்.

இதனையடுத்து அடுத்த மகாநாயக்கராக தமக்கு நெருக்கமான ஒருவரை நியமித்துக் கொள்வதில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக களத்தில் குதித்துள்ளன.

ஆளும் கட்சியின் சார்பில் இத்தேபான தம்மாலங்கார தேரர் முன்னிறுத்தப்பட்டிருந்தார். இவர் ஜனாதிபதியின் ஆலோசகரான குணாலங்கார தேரரின் குருவாகும்.

எதிர்க்கட்சியின் சார்பில் பெல்லன விமலரத்தின தேரர் முன்னிறுத்தப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவை விகாரையின் பிரதம குருவான இவருக்கு, பௌத்த பிக்குகள் மத்தியிலும் கணிசமான ஆதரவு உள்ளது.

இந்நிலையில் ஆளும், எதிர்க்கட்சிகளின் குடுமிப்பிடி காரணமாக சீயம் நிகாயவிற்கான மகாநாயக்கர் தெரிவு இதுவரை முடிவடையவில்லை.

இதன் காரணமாக மகாநாயக்கரை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நியமனங்கள் தொடர்பில் சீயம் நிகாய தேரர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply