ஹாங்ஹாங்கில், ஜனநாய சீர்திருத்தம் செய்ய கோரிக்கை விடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கடந்த சில வாரங்கலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுவாகிக்கொண்டே வருகிறது.
நேற்று இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த மிளகுப் பொடி தூவியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்த அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுகுறித்த விரிவான செய்தி ஒன்றை பிபிசி நிறுவனம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாங்காங் மக்கள் மீது சீனா எவ்வாறு அடக்குமுறைகளில் ஈடுபடுகிறது என்பதை பிபிசி தெள்ளத்தெளிவாக தினந்தோறும் செய்திகளை வெளியிட்டு வருவதால் ஆத்திமிடைந்துள்ள சீனா, லண்டனை மையமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் பிபிசி இணையதளத்தை சீனாவில் முடக்க உத்தரவிட்டுள்ளது. இதேபோல் நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தையும், சீனா மொழியில் வெளியாகும் பிபிசி இணையளத்தையும் முடக்கியுள்ளது.
சீனாவின் இந்த தடைக்கு பிபிசி நிர்வாகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படக்கூடியவை என்றும், பத்திரிகைகள் அணுகக்கூடிய செய்திகள் மற்றும் தகவல்களை முடக்க சீனா முடிவு செய்தால், அதனை எதிர்த்து உலக பத்திரிகைகள் இணைந்து சீன அரசுக்கு எதிராக போராடுவோம் என்று அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அராஜக போக்கு உடனே மாற்றப்படவேண்டும் என்று பிபிசி உலகம் .குரூப்பின் இயக்குனர் பீட்டர் ஹராக்கர்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் சீனாவில் பிபிசியின் ஆங்கிலப்பிரிவு இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹாங் லீ கூறுகையில், சீனாவில் இணையத்தில் முழுமையான சுதந்திரம் உள்ளது. அதே நேரம் சீன அரசு, இணயைதளங்கள் சட்டப்படி நிர்வகிக்கிறது என்றார்.
















