உலகின் மிக மெல்லிய ஐபேட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருக்கின்றது. “ஐபேட் ஏர் 2″(iPad Air) என்ற பெயர் கொண்ட இந்த ஐபேட் 6.1 மிமீ அகலமே இருக்கும் என்பது இதன் சிறப்பு. வரும் திங்கட்கிழமை அமெரிக்காவில் இந்த புதிய வகை ஐபேட் விற்பனைக்கு வரவுள்ளது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
Mac OS software வசதி கொண்ட இந்த ஐபேட், உலகின் மிக அதிகமான ‘ஹை’ ரெசலூசன்’ திறன் கொண்டது.
இதன் சிறப்புகள்:
அகலம்: 6.1 மிமீ (இதற்கு முன்னர் வெளிவந்த ஐபேட் ஏர் அளவை விட இது 18% மெல்லியது)
ஸ்க்ரீன் அளவு” 9.7 இன்ச்
கேமரா: 8 மெகாபிக்சல் ,
பேட்டரி திறன்: 10 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்
கலர்: சில்வர், கிரே மற்றும் கோல்ட்
கிடைக்குமிடம்: ஆன்லைனில் மட்டும். தற்போதைக்கு கடைகளில் விற்பனை இல்லை.
விலை: $499 முதல் $699 வரை
















