புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கினாலும் சொத்து முடக்கம் தற்போதைக்கு அமுலில் இருக்கும்

pulam-ltteதமிழீழ விடுதலைப் புலிளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கிய போதிலும் சொத்து முடக்கம் தொடர்பிலான உத்தரவுகள் தளர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்த ஐரோப்பிய நீதிமன்ற நீதவான்கள், புலிகளின் சொத்து முடக்கம் குறித்த உத்தரவு தற்போதைக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் 2006ம் ஆண்டு இணைக்கப்பட்டதாகவும், புலிகள் தொடர்பில் நேரடியான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்காலிக அடிப்படையில் சொத்து முடக்கம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Tags: ,

Leave a Reply