அன்று.. 28 நாட்கள்; இன்று.. 21 நாட்கள் (மட்டும்) சிறைவாசம் அனுபவித்த ஜெ.!

jayalalitha-new-12-600அதிமுக பொதுச்செயலாளர் தமது வாழ்க்கையில் 2 வழக்குகளில் 49 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் கிடைத்துள்ளதால் அவரது சிறைவாசம் முடிவுக்கு வருகிறது. இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு கலர் டிவி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

அப்போது மொத்தம் 28 நாட்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இதேபோல் தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் அடைத்தனர். தற்போது உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனால் மொத்தம் ஜெயலலிதாவின் பெங்களூர் சிறைவாசம் 21 நாட்களுடன் முடிவுக்கு வந்தது.

Tags: , ,

Leave a Reply