நீதிபதி குன்ஹா உத்தரவுக்கு பிறகே ஜெயலலிதா விடுதலை!

jayalalitha9பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதா நாளை மாலை விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் இன்று மாலைதான் ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

ஜாமீன் உத்தரவாதத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் ஜெயலலிதா தரப்பினர் தருகிறார்கள். இந்த உத்தரவாதத்தை ஏற்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஜாமீனில் விடுவிக்க உத்தரவு தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குன்ஹா உத்தரவை அடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: , , ,

Leave a Reply