அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியதை அடுத்து ஜெயலலிதா பெயரில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்று இன்று மாலை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் “நீதித்துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று அ.தி.மு.க. தொண்டர்கள், தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
ஒரு தலைவனைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறும் போது, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார். பேரறிஞர் அண்ணா வழியில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் அவர்களுடைய வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.
எனது வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் மீதுள்ள பாசத்தின் காரணமாகவும் பற்றின் காரணமாகவும் அன்பின் காரணமாகவும் நீதிமன்றத் தீர்ப்பு குறித்தோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்தோ நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்தோ யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் நீதித்துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் யார் மீதும் எந்தவிதக் குற்றச்சாட்டையும் சுமத்த வேண்டாம் என்றும் யாரும் குறை கூற இடமளிக்காத வகையில் அமைதி காத்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கினை எப்பொழுதும் போல செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் எனது அன்பார்ந்த தமிழக மக்களையும் எனது ஆதரவாளர்களையும் என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளையும் அன்புடன் கேட்டுக்
நீதிமன்றத்தில் நான் செய்துள்ள மேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















