பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல்களை இரண்டு முக்கிய நாடுகளினால் ஒட்டுக் கேட்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலம் பொருந்திய இரண்டு நாடுகளினதும் உளவுப் பிரிவினர், கோத்தபாய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல்களை தொடர்ச்சியாக ஒட்டு கேட்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு நாடுகளினதும் புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பதனால், கோத்தபாவின் தொலைபேசி உரையாடல்கள் தெளிவற்று போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
8-10 நிமிட உரையாடல்களின் பின்னர் தொலைபேசி தெளிவற்று போவதுடன் இணைப்பு துண்டிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள் இரகசியமாக ஒட்டு கேட்பதனால் இவ்வாறு இணைப்பு துண்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் கோத்தபாய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல்களை வெளிநாட்டு உளவுப் பிரிவினர் ஒட்டுக் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அண்மைக்காலமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
கோத்தபாய ராஜபக்சவின் அனைத்து தொலைபேசி உரையாடல்களையும், குறித்த இரண்டு நாடுகளினால் தொடர்ச்சியாக ஒட்டுக் கேட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
















