பள்ளியில் கணக்கு பரிட்சை என்றாலே பலருக்கு அலர்ஜி. கணக்கு பாடத்தை பிடிக்காதவர்கள்தான் அதிகம். அதேபோல் கணக்கு பரிட்சையில் தோல்வி அடையவர்கள்தான் அதிகம் என்று ஒரு கருத்துக்கணிப்பே கூறுகிறது. இந்த பிரச்சனை உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள Devon என்ற பகுதியை சேர்ந்த 19 வயது Rory Kirkman என்ற கணக்கு பாடத்தால் தான் படிக்கும் வகுப்பில் மூன்று வருடங்கள் தோல்வியடைந்து ஒரே வகுப்பில் இருந்தார். இதனால் அவருக்கு மிகவும் அவமானமாக இருந்ததாம். தனக்கு கணக்கில் உள்ள பார்முலாக்கள் சுத்தமாக புரியவில்லை என்று கூறிய Rory Kirkman, இந்த பிரச்சனையை போக்குவதற்காக கணக்கு பாடத்தில் உள்ள பார்முலா ஒன்றை டாட்டூ வரைய முடிவு செய்தார்.
தனது பின்பக்கத்தில் மிகவும் முக்கியமான கணக்கு பார்முலா ஒன்றை டாட்டு குத்திய Rory Kirkman, கண்டிப்பாக இந்த வருடம் கணக்கில் பாஸ் செய்துவிடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அவருடைய வித்தியாசமான முயற்சியை கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அவரை கேலி செய்து வருகின்றனர்.
பார்முலாவை டாட்டூ குத்தியதால், தனக்கு கணக்கு பாடத்தின் மீது ஆர்வம் வந்துள்ளதாகவும், இந்த வருடம் கண்டிப்பாக கணக்கு பாடத்தில் மற்ற பாடங்களை விட அதிக மதிப்பெண் எடுக்க முயற்சிப்பேன் என்றும் Rory Kirkman கூறியுள்ளார்.
















