கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வெளியான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6பிளஸ் இன்றுமுதல் இந்தியாவில் கிடைக்கும். வெளிநாட்டினை போல பலத்த வரவேற்பு இல்லை எனினும் ஐபோன்களை ஆன்லைன் மூலம் பலர் ஆர்டர்கள் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றது.
பிளிப்கார்ட், அமேசான், இபே, ஸ்னாப்டீல், ஆகிய இணையதளங்களில் ஐபோன் 6 கிடைக்கின்றது. அனைத்து இணையதளங்களிலும் ஒரே விலையாக ரூ.53,500 என்ற விலையில்தான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6ப்ளஸை வாங்குவதற்காக ஆப்பிள் ஷோரூம்கள் முன்பு நேற்று இரவு முதல் கியூவில் நின்று கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
டெல்லியில் ஆப்பிள் ஐபோன் 6, 16ஜிபி திறன் கொண்டது ரூ.53,500க்கும், 64 ஜிபி திறன் கொண்டது ரூ.62,500க்கும், 128 ஜிபி திறன் கொண்டது ரூ.71,500க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபொல் ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் 16ஜிபி திறன் கொண்டது ரூ.62,500க்கும், 64 ஜிபி திறன் கொண்டது ரூ.71,500க்கும், 128ஜிபி திறன் கொண்டது ரூ.80,500க்கும் விற்பனையாகிறது.
டெல்லியில் ஐ.டியில் பணிபுரியும் அருண் ஜெயின் என்ற 25 வயது வாலிபர் இந்தியாவில் முதல்முதலாக ஐபோன்6ஐ வாங்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
















