ஆளும் கட்சிக்கான ஆதரவு நாளுக்கு நாள் வீழ்ச்சி

mahinthaஆளும் கட்சிக்கான ஆதரவு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுரத்தில் பிரதி அமைச்சர் ஒருவர் நடத்திய சந்திப்பில் பங்கேற்ற ஆளும் கட்சி அரசிலய்வாதிகளே, அமைச்சருக்கு கூக்குரல் எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் அனுராதபுரத்தில் பிரதி சுகாதார அமைச்சர் நலின் திஸாநாயக்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

எனினும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

சகல பிரச்சினைகளையும் மறந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென பிரதி அமைச்சர் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கையை பிரதேச அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர். மக்களுக்கு தங்களினால் சேவையாற்ற முடியவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தின் ஊடாக நன்மை பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமுற்ற அமைச்சருக்கும் பிரதேச அரசியல்வாதிகளுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பிரதேச அரசியல்வாதிகளும் கட்சியின் கீழ்நிலைத் தொண்டர்களும் அமைச்சருக்கு எதிராக கூக்குரல் எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply