தலைமை அலுவலகத்தை வீடியோ எடுத்தவரை கொன்று சிலுவையில் தொங்க விட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

irag-photoஈராக் மற்றும் சிரியாவில் தங்கள் ஆதிக்கத்தை முழு அளவில் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் முஸ்லீம் நாடுகளை இணைத்து தனி நாடாக மாற்ற முயற்சி செய்த் வருகின்றனர். தங்களிடம் சிக்கிய பணயக்கைதிகளின் தலையை துண்டித்தும், ஈராக் மற்றும் சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வரும் இந்த தீவிரவாதிகளை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் அவ்வப்போது தாக்கி வருகின்றன.

இந்நிலையில் சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணத்தில் அல்–பாப் என்ற நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமை அலுவலகத்தை வீடியோ எடுத்த ஒருவரை பிடித்த தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று அவரது பிணத்தை சிலுவையில் கட்டி தொங்க விட்டுள்ளனர். மேலும் அவர் செய்த குற்றங்களை ஒரு பெரிய அட்டையில் எழுதி அவருடைய பிணத்தில் ஒட்டியுள்ளனர். அதில் கொல்லப்பட்டவர் பெயர் மற்றும் செய்த குற்றம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ஐ.எஸ்.’ அமைப்பை உளவு பார்ப்பவர்கள் மற்றும் தங்களது மதத்தில் இருந்து பிரிந்து செல்பவர்களுக்கு இது போன்ற தண்டனையை தீவிரவாதிகள் வழங்குகின்றனர். கொல்லப்பட்டவர்களை 3 நாட்கள் சிலுவையில் கட்டி தொங்க விடுகின்றனர்.

Tags: , ,

Leave a Reply