விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்; இலங்கை அரசுக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அறிக்கை

un-lkவிடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தளர்த்தியுள்ளமை தொடர்பில் இலங்கை

அரசுக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்க அரச தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16 ஆம் திகதி லக்ஸம் பேர்க் நீதிமன்றில் ஐரோப்பிய யூனியன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கூறியிருந்தது.
இங்கு தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் ஆஜரான வீ.கூபீ ஏ.எம்.வென் எய்க் மற்றும் ரி.புருமா ஆகியோர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதாரமற்ற நிலையில் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்துள்ளன என்ற வாதத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியனில் தடைசெய்யமுடியாது என தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பில் அரச தரப்பு ஆராய்ந்து வருகின்றது. அதன் முதற்கட்டமாக வெளிவிவகார அமைச்சு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. மேலும் ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க இது பற்றி கூறியதாவது.
இந்த தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. சவால்கள், அழுத்தங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதுடன், எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டால் வழங்க வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது என்றார்.

Tags: , ,

Leave a Reply