சர்வாதிகாரி போல செயல்பட்டு ஈராக் நாட்டை ஆட்சி புரிந்து வந்த ஈராக் முன்னாள் அதிபர் சதாம்உசேன் பின்னர் அமெரிக்கா ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார். தற்போது இவர் அதிபராக இருந்தபோது போட்ட திடுக்கிடும் திட்டம் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த 1981ஆம் ஆண்டு சதாம் உசேன் ஈராக்கில் அதிபராக இருந்தபோது, அதன் எதிரி நாடான இஸ்ரேல், ஈராக்கின் அணு உலை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈராக் பெரும் பாதிப்பை அடைந்தது. இதற்கு பழி வாங்க அப்போதையை இஸ்ரேல் அதிபர் மெனாசென் பிகின் என்பவரை கடத்தி ஈராக் கொண்டு வர சதாம் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த கடட்தல் திட்டத்திற்கு வெளிநாட்டில் உள்ள ஒரு முக்கிய தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டத்தை சதாம் உசேன் கைவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த திடுக்கிடும் தகவலை சதாம் உசேனின் வழக்கறிஞர் பாடீ ஆரீப் அவர்கள் எழுதிய ஒரு புத்தக்கதில் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாகவும், இந்த புத்தகத்தில் இதுவரை வெளிவராத சதம் உசேனின் பல மர்மங்கள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
















