வவுனியா குட்செட் வீதியில் நிறுத்தப்படும் எண்ணெய் பவுசர்களால் போக்குவரத்து பாதிப்பு
வவுனியா, குட்செட் வீதியில் நிறுத்தப்படும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் பவுசர்களால் போக்குவரத்து பயணிகள், மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
வவுனியா, குட்செட் வீதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எண்ணெய்களுடன் வரும் பவுசர்கள் பல நீண்ட நேரமாக குட்செட் வீதியில் நிறுத்தப்படுகின்றது. குறிப்பாக பாடசாலை, அலுவலகம் செல்லும் நேரம், பாடசாலை முடியும் நேரம் என அடிக்கடி பல வாகனங்கள் வீதியில் தொடர்ச்சியாக நிறுத்தப்படுவதால் அப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அவ் வீதியால் பயணிக்கும் மாணவர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
















