பாகிஸ்தானில் இருந்து அடித்து விரட்டப்பட்ட இந்துக்கள் மீண்டும் நாடு திரும்ப நடவடிக்கை. இம்ரான்கான்

pakistan-hindu-peopleபாகிஸ்தானில் எங்களுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் துன்புறுத்தி அடித்து விரட்டப்பட்ட இந்துக்களை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து ஆதரவு தருவோம் என்று அஎதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

கடந்த பல மாதங்களாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவருமான இம்ரான் கான், நேற்று பேசிய ஒரு கூட்டத்தில் “பாகிஸ்தானில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்க்கொண்டு நாட்டை விட்டு வெளியேறிய இந்துக்கள், நாட்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்ததும் நாடு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்,” என்றார். “ இந்துக்கள் மற்றும் காலாஷ் சமூகத்தினர் நாட்டில் இஸ்லாமிய மதத்தை தழுவசெய்ய கட்டாயப்படுத்துவதற்கு நான் மிகவும் வருந்துகிறேன், இது உண்மையில் நமது மதத்திற்கு எதிரானது.” என்று இம்ரான் கான் பேசியுள்ளார்.

உண்மையான இஸ்லாமியர்கள் என்றால் தங்களூடைய நன்னடத்தை மூலம் இஸ்லாமியத்தை பரப்ப வேண்டும். யாரையும் மதம் மாற கட்டாயப்படுத்தக் கூடாது. பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா பார்வையின் பிரகாரம், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு, நீதி மற்றும் சமஉரிமை கொடுக்கப்பட்ட வேண்டும். நாம் அவர்களுக்கு அதிகாரம் அளித்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என்று இம்ரான் கான் கூறியுள்ளார். இஸ்லாமாபாத்தில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கூடியிருந்த இடத்தில் கட்சியின் சார்பில் சிறுபான்மையினர் தினம் கொண்டாடப்பட்டது. கட்சியின் சார்பில் திபாவளியும் கொண்டாடப்பட்டது.

Tags: , ,

Leave a Reply