கத்தி திரைப்படத்திற்கு தடை? விஜய் எடுக்கவேண்டிய அதிரடி முடிவு என்ன?

kaththi-movie-stillவிஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனைதான். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு படத்தை எதிர்த்து வருகின்றன.

சென்சார் போர்டு சர்டிபிகேட் ஒரு படத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் கிளையே மறுத்தபோது, இந்த அமைப்புகள் ஐகோர்ட்டை விட சக்தி வாய்ந்தவைகளா? என்பது புரியாமல் இருக்கின்றது.

சமீபத்தில் ஜெயலலிதா குறித்த தண்டனை தீர்ப்பு வந்தபோது நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்த தலைவர்கள், அதே நீதிமன்றம் படத்தை தடை செய்ய முடியாது என்று உத்தரவிட்டும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று புரியவில்லை.

லைகா நிறுவனத்தின் பெயர்தான் உண்மையான காரணம் என்று கூறினால் உண்மையில் எல்.கே.ஜி குழந்தை கூட நம்பாது. இதே லைகா நிறுவனம் புதுமுகங்களை வைத்து படம் தயாரித்திருந்தால் அந்த படம் எவ்வித எதிர்ப்பும் இன்றி தாராளமாக வெளிவந்திருக்கும்.

தமிழ் அமைப்புகள் என்ற பெயரில் பிரபலமானவர்களை மட்டுமே எதிர்க்கும் கொள்கையை வளர்த்து வருகின்றனர். இது ஜனநாயக நாட்டில் மிகவும் ஆபத்தானது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் ‘சண்டியர்’ என்ற படத்தை திரையிட முயற்சி செய்தார். ஆனால் அந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடு தூக்கியவர்கள் இவ்வருடம் அதே பெயரில் வெளிவந்த படத்தை கண்டுகொள்ளவில்லை. ஏன் இந்த பாரபட்சம்?

சிகரெட் பிடிக்கும் காட்சி இருக்கின்றது என்பதற்காகவே பாபா திரைப்படத்தை எதிர்த்தார்கள். ஆனால் அதன்பின்னர் பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ஹீரோக்கள் சிகரெட் பிடித்தார்கள். அந்த படங்களை ஏன் எதிர்க்கவில்லை.

பழுத்த மரத்தை நோக்கி மட்டுமே கல்லெறியும் கூட்டம் ஒன்று கிளம்பியுள்ளது. இந்த பூனைக்கு மணி கட்டியே ஆகவேண்டும். அதுவும் விஜய்யின் படங்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகிறன. காவலன், தலைவா, துப்பாக்கி, கத்தி என தொடர்ந்து நான்காவது முறையாக விஜய்யை குறிவைத்து தாக்குகின்றனர்.

விஜய் இம்முறை ஒரு முடிவு கட்டவேண்டும். கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளள விஜய் துணிந்து ஒரு முடிவை எடுக்கவேண்டும். தமிழ் அமைப்புகள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டிருக்கும் சமுதாய குப்பைகளை அகற்ற தகுந்த வழியை விஜய் தேர்வு செய்யவேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் விருப்பம். செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tags: , ,

Leave a Reply