அமெரிக்காவில் எபோலா வைரஸ். அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்க எம்.பிக்கள்.

obama2மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4,500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகலை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதால் அங்கு பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தனியறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த எபோலா வைரஸ் நோயை ஒபாமா அரசு கையாண்டு வரும் விதம் குறித்து அமெரிக்காவில் சில விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் குரல் ஒபாமாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஒபாமா “மேற்கு ஆப்பிரிக்க மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை விதிக்கும் யோசனையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அமெரிக்க அரசு தற்போது இல்லை. இப்படி உலகின் ஒரு மொத்த பகுதிக்கே சீல் வைக்க முயற்சி செய்வது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். வைரஸ் நோய் கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. அச்சம் அடையவும் வேண்டாம்”, இந்த நோயுக்குரிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசு எடுத்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply