மிஸ் ஸ்ரீலங்கா அழகியும் நாட்டை விட்டு வெளியேற முடிவு?

Solangiமிஸ் ஸ்ரீலங்கா அழகியாக முடிசூட்டுக் கொண்டுள்ள சோலங்ஜி குணவிஜய, மிக விரைவில் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நாட்டில் தங்கியிருக்க அவர் தீர்மானித்துள்ளார். டிசம்பரில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட பின்னரே, நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.

மிகவும் திறமையான கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையான சோலங்ஜி, இலங்கையின் அழகு ராணியாகவும் முடிசூடிக் கொண்டுள்ளார்.

பின்னர் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் அவர் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

அழகிப் போட்டியில் வெற்றிபெற்றது முதல் சோலங்ஜிக்கு, அரசியல்வாதிகள் சிலர் பல்வேறு வகையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஆளுங்கட்சியினரின் செல்லப்பிள்ளைகளாக இருந்து அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட அனார்கலி, ஹிருணிகா போன்று தன் பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பாத சோலங்ஜி விரும்பவில்லை.

இதன் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். பெரும்பாலும் சோலங்ஜி, வெளிநாடொன்றில் நிரந்தரமாக வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டு, மீண்டும் நாட்டுக்குத் திரும்பி வருவதில்லைஎன்ற முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply