புலிகள் மீதான தடை நீக்கம் அரசியல் முடிவல்ல!- சட்டத்தின் தீர்மானம் – ஐரோப்பிய ஒன்றியம்

LTTE 1_CIவிடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் அரசியல் முடிவு அல்ல எனவும் அது நீதிமன்றத்தின் சட்டத் தீர்ப்பு என ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றம், கடந்த 16 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து, அவர்களின் நிதியை முடக்கிய ஒன்றியம் எடுத்திருந்த முடிவை இரத்துச் செய்தது.

எனினும், விடுதலைப் புலிகளின் நிதி முடக்கம் தொடர்பான இரத்து முடிவானது இன்னும் மூன்று மாதங்கள் பேணப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி மற்றும் தகவல் அலுவலகம், இந்த தீர்ப்பானது நீதிமன்றத்தின் சட்ட முடிவு என்பதையும் அது ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் அரசியல் தீர்மானம் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது.

அரசியலில் இருந்து சட்டத்தை பிரித்து பார்ப்பது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தின் முக்கியமான வேறுபாடாகும்.

மேலும் இது சட்டத்தின் தெளிவான நடைமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் விடுதலைப் புலிகளின் நிதி முடக்கம் உட்பட அடிப்படை பிரச்சினைகளை நீதிமன்றம் பொருட்படுத்தாது.

அதேவேளை விடுதலைப் புலிகளின் கூற்றை நிராகரித்த நீதிமன்றம், பயங்கரவாத தடுப்பு சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் கீழ் ஆயுத மோதல் தொடர்பான சூழ்நிலைகளில் விண்ணப்பிக்க முடியும் என தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் விதிமுறைகள் பற்றிய விபரங்களை கவனமாக ஆராயும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி மற்றும் தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply