புலிகளின் தடைநீக்கத்திற்கு அரசாங்கம் உதவியது!- அரசியல் அவதானிகள்

namal-dansingஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கிக்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் உதவியும் தமிழீழ ஆதரவாளர்களுக்கு கிடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு விதித்த தடையை நீக்குமாறு கோரி புலிகளின் ஆதரவாளர்கள் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட தினத்தில் மனுதாரர் தரப்பில் தடை நீக்குவதற்காக வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

எனினும் அரசாங்கம் அதற்கு எதிரான வாதங்களை முன்வைக்கவில்லை. இதனை கவனத்தில் எடுத்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றம் தடையை நீக்கியது.

விடுதலைப் புலிகளின் இந்த முயற்சியை தோற்கடிக்க அரசாங்கம் தனது ராஜதந்திர சேவையை திறமையான முறையில் பயன்படுத்தவில்லை என்பதுடன் இலங்கையின் ராஜதந்திர சேவை கோமாளிகளின் கைகளுக்குள் சிக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை அரசாங்கம் இவ்வாறான முடிவை எதிர்ப்பது வேண்டும் என்றே வழக்கில் ஆஜராகவில்லை எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்து நடைபெறவுள்ள பிரதான தேர்தலில் தமிழீழ பீதியை உருவகித்து காட்டி மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் பெற் அரசாங்கம் முயற்சித்து வருவது ஆளும் கட்சியின் சில அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தெளிவுப்படுத்தியுள்ளன.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரட்னவுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க ஊடகம் ஒன்றின் மூலம் தகவல் வெளியிட்ட பின்னர், ஊடகங்கள் அது தொடர்பான பல செய்திகளை வெளியிட்டன.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் நடனமாடும் புகைப்படத்தையும் ஊடங்கள் வெளியிட்டிருந்தன.

Tags: , ,

Leave a Reply