பல நாட்களாக படம் வருமா? வராதா? என தவியாய் தவித்த ரசிகர்களுக்கு இன்றே மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தமிழின துரோகியான ராஜபக்சேவின் கூட்டாளியை தமிழகத்தில் இருந்து விரட்டியடித்தது இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
லைகா பெயர் நீக்கப்படும் என விஜய் கூறியதும் அனைத்து தமிழ் உணர்வாளர்கள் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி. பெரும்பாலானோர் தங்களது போராட்டத்தை இனிதே முடித்து விட்டு ,கத்தி படத்தின் டிக்கெட் வாங்க சென்றுவிட்டனர். இந்த போராட்டத்தில் சில திருமா போன்ற இரட்டை வேட போலிகளும் கூவினர். கழுதை கூட்டத்தோடு கூட்டமாக கூவியதால் யார் கண்ணிலும் படமால் தப்பித்துவிட்டது.
சரி விசயத்துக்கு வருவோம். அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கத்தி படத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட்டனர். காரணம் லைகா பெயரை நீக்கிவிட்டதாக விஜய் அறிவித்ததால். இதனால் சொன்ன தேதியில் நாளை கத்தி படம் வெளியாக உள்ளது. தற்பொழுது ஊரே திரையரங்கத்தை நோக்கி படையெடுத்துவிட்டது. டிக்கெட் வாங்குவதற்கே திரையரங்கத்தில் கூட்டம் அலைமோதுகின்றது. மளமளவென டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. கத்தி படத்தின் டிக்கெட் விற்பனையை பார்த்து திரையரங்கமே அசந்துபோய்விட்டது.
இன்னும் சில மணி நேரத்தில் பல நாட்கள் ஹவுஸ்புல்லாகும் என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















