வடக்குக்கு செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காலவரையறை அற்றவை: இராணுவ பேச்சாளர்

Ruwan_Wanigasuriyaபாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்றி வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் ஒமந்தையில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல, வட பகுதி நிலவரம் குறித்த குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை ஆராய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை வடபகுதியின் தற்போதைய நிலையை கவனமாக ஆராய்ந்த பின்னரே எடுக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்ககூடிய தற்போதைய விடயங்களை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply