ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜாதகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பாணந்துறை ஹொரோதுடுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நன்மையையும் அளிக்கவில்லை.
“மஹிந்தவிற்கு முடியும் என” எல்லா இடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
எனினும் நாம் நினைக்கின்றோம் மஹிந்தவிற்கு மூன்றாம் தடவை போட்டியிட முடியாது என்று, போட்டியிட்டாலும் வெற்றியீட்ட முடியாது.
தற்போது ஜனாதிபதி மஹிந்தவின் ஜாதகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஊவா மாகணசபைத் தேர்தலில் மக்கள் சிறந்த பாடமொன்றை அரசாங்கத்திற்கு கற்பித்தனர்.
இந்த அரசாங்கத்தில் அநேகமானவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பது மக்களுக்கு தெரியும்.
அன்று எங்களது படைவீரர்களை, பௌத்த பிக்குகளை கொலை செய்த கருணா அம்மானை ஜனாதிபதி மடியில் வைத்து பாலூட்டுகின்றார்.
எனினும் ஜனாதிபதி நாட்டை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என குறிப்பிடுகின்றார்.
நாட்டின் பெரும்பகுதி சீனாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பம் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கின்றது.
நாட்டு மக்கள் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மத்தள விமான நிலையம்ää ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றை சீனாவிற்கு வழங்க தற்போதே திட்டம் தீட்டப்பட்டுள்ளது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தீர்மானம் மிக்கதொன்றாகும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
















