ஏப்ரலில் பூமிக்கு வரும் வில்லியம்- கேத் மிடில்டன் பேபி

kate_william_001இங்கிலாந்து இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தை ஏப்ரலில் பிறக்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு ஜார்ஜ் என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் இளவரசி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமானார், இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், குழந்தை ஏப்ரலில் பிறக்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத்தின் 89 ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 21 அல்லது இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதியின் திருமண நாளான ஏப்ரல் 29 ஆகிய திகதிகளையொட்டி குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகவலை இங்கிலாந்து அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply