கொலம்பியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது முகத்தில் பச்சை மற்றும் தோடுகள் குத்திக்கொண்டு பேய் மனிதன் என்ற பெயரை பெற்றுள்ளார். கொலம்பியாவை சேர்ந்த கெயிம் மோரிஸ் (Caim Morris Age-41) முகம் முழுவதும் பச்சை மற்றும் தோடுகள் குத்தி தன்னை பேய் போல் தோற்றமளிக்க செய்துள்ளார். இதற்காக 11 ஆண்டுகள் செலவு செய்து கண்களை கருப்பு நிறத்தில் பச்சை குத்தியும், தலை மற்றும் கைகளில் கொம்புகளையும் வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கொடூரமாக அலங்காரம் செய்ததால் இவர் குடும்பத்தினரை விட்டு மெக்சிக்கோ சென்றுள்ளார். இதுகுறித்து கெயிம் கூறுகையில், மக்கள் தன்னை பார்த்தவுடன் அதிர்ச்சியடைவர்கள் என்றும் எனக்கு மற்ற நபர்களை விட வித்தியசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து டி.ஜே வாக பணியாற்றுவதுடன், அரங்கில் நடனங்களை அரங்கேற்றி வருகிறார்.
















